பேர்லின், பிராங்போட் நகரங்களில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசுக்கு எதிராக சுவரொட்டிப் போராட்டம் முன்னெடுப்பு!

dayas_postal_germany_3தமிழின அழிப்பை மேற்கொண்ட படைத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் யேர்மனி நாட்டுக்கான துணைத் தூதுவராகப் பதியேற்றதைக் கண்டித்து யேர்மனிய நாட்டவர்களால் சுவரொட்டிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக யேர்மனியின் தலைநகர் பேர்லின் மற்றும் பிராங்போட் நகரங்களில் இப்போராட்டம் இடம்பெற்றுள்ளது.

பேர்லின் மற்றும் பிராங்போட் நகரங்களில் உள்ள தூதுரங்கள், துணைத் தூதரங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொடருந்து, விளம்பரப் பலகைகள், தேர்தல் விளம்பரப் பதாதைகள், முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய கட்டிடங்களில் போர்க் குற்றம் புரிந்த யேர்மனிக்கான சிறீலங்காத் துணைத் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் புகைப்படத்துடன் வாசங்கள் இணைக்கப்பட்ட சுவரொட்டிகள் பெருமளவில் ஒட்டப்பட்டுள்ளன.

தூதரங்கள் அதிகாலையில் திறக்கப்பட்ட பின்னர் விழிப்படைந்த நிலையில் தூதரகக் மதில், மற்றும் சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளைக் அமெரிக்கத் தூதுரகத்தைத் தவிர ஏனைய தூதரங்கள் கிளித்துள்ளன.

இச்சவத்தைத் தொடர்ந்து அதிகாலை முதல் சிறீலங்கா தூதுரக அதிகாரிகளும் யேர்மனிக் காவல்துறையினரும் ஒவ்வொரு இடமாகத் தேடி சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர்.

சுவரொட்டியில்:

  1. போர்க் குற்றம் புரிந்த ஒருவரை யேர்மனி அரசாங்கம் எவ்வாறு நாட்டுக்குள் வர அனுமதித்தது.
  2. தமிழர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?
  3. யேர்மனியில் மனித உரிமைகள் இருக்கிறதா?
  4. சனநாயகத்தின் அடிப்படையான சகோதரத்துவம் செத்துவிட்டதா?
  5. யேர்மனியில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை

போன்ற வாசங்கள் எழுதப்பட்டுள்ளன.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.