இடைத்தங்கல் முகாம்களுக்கு செல்ல எதிர்க்கட்சியினருக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை?

supreme_court_colomboவடக்கு இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட ஏன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என உயர் நீதிமன்றம் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்குச் செல்ல ஏதேனும் தடைகள் காணப்பட்டால் அது குறித்து நீதிமன்றில் அறிவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

முகாம்களுக்கு சென்று பார்வையிட தமக்கு அனுமதி வழங்கப்படாமையின் மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையின் போது உயர் நீதிமன்றம் உத்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
உயர் நீதிமன்ற நீதவான்களான என்.ஜீ.அமரதுங்க, சலீம் மர்சூப் மற்றும் எஸ்.ஐ. இமாம் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர்.
 
இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.
 
பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் செனவிரட்ன, டொக்டர் ஜயலத் ஜயவர்தன, மங்கள சமரவீர, அசன் அலி மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
 
பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.பீ. பெர்னாண்டோ உள்ளிட்ட எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
வடக்கு இடைத்தங்கல் முகாம்களை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
குறிப்பிட்ட சில உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மட்டும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.