எமக்கெதிரான நோர்வே தூதரகம் இங்கு எதற்கு – தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

gunadasaamarasekeraஇலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தை அகற்ற வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. நோர்வே இலங்கைக்கு எதிராக மேற்கொண்ட சூழ்ச்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சில மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகள் நோர்வேயின் நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கையில் உள்ள நோர்வே தூதரகத்தை அகற்றுவது தொடர்பாக மக்கள் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஒன்றிணைய வேண்டும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.