தமிழீழ மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல்கள்தான் ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் இல்லாமல் போனதிர்ற்கு கரணம்

Lalkantha_1இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களினாலேயே ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மறுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
 
ரயில் தொழில்நுட்பவியலாளர்கள் தொழிற்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலம் மட்டுமே ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்ட மறுப்பானது ஒர் சூழ்ச்சித் திட்டம் எனவும், தென் மாகாணசபைத் தேர்தல்களில் 85 வீதமான வாக்குகளை ஆளும் கட்சிக்கு வழங்குவதன் மூலம் இந்த சூழ்ச்சியை முறியடிக்க முடியும் எனவும் அரசாங்கம் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த மூன்றரை ஆண்டுகளில் சுமார் 11 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசியல் அழுத்தங்கள் காரணமாக சுமார் 50 ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வேறும் நாடுகளில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
சலுகைத் திட்டத்தை வழங்கும் போது ஐரோப்பிய ஒன்றியம் இவை தொடர்பில் கவனம் செலுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் இழக்கப்பட்டால் பெருந்தொகையான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.