இலங்கையில் பாலியல் பலாத்காரம் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது

hillary-clinton-secretary-statepreviewஇலங்கையில் பாலியல் பலாத்காரச் செயல்கள் யுத்த ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை, பல்கான்ஸ, பர்மா போன்ற நாடுகளில் யுத்த நடவடிக்கைகளின் போது பாலியல் வன்முறைச் சம்பவங்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறான நாடுகளில் இடம்பெற்ற கொடூரமான பாலியல் பலாத்காரச் செயல்கள் தொடர்பில் விசாரணைகளோ அல்லது தண்டனைகளோ இதுவரையில் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்hளர்.
 
எனவே, குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை இவ்வாறான மனித உரிமை மீறல்களை மேலும் ஊக்கப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.