கோடீஸ்வர வர்த்தகர் சிங்கப்பூரில் கைது புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்தாராம்

laughing-guy-thumb168075தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரின் பிரபல அரசியல்வாதிகளில் ஒருவரும் கோடீஸ் வர வர்த்தகருமான பால்ராஜ் நாயுடு என் பவர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் தமது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவர், நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், அவர் மீது இன்னமும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் உத்தி யோகபூர்வமாகத் தாக்கல் செய்யப்பட வில்லை என்றும்,  அவர் மீதான வழக்கு எதிர் வரும் 05ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நாயுடு அமெரிக்க, பிரித்தானிய பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அவரைத் தங்களிடம் கையளிக்கவேண்டுமென்று அமெரிக்க அரசு சிங்கப்பூரிடம் கோரியதாகவும் தெரியவருகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.