குருநாகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

09_01_07_colombo_pande_03_59660_435குருநாகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த  இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 பேரில் பாடசாலை சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன் வாகன சாரதியும் உயிரிழந்துக்களதாக வைத்தியசாலை தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் மக்கள் பீதியில் அங்குமிங்கும் ஓடித்திரிந்தாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். பயணிகள் பஸ்ஒன்றினுள் பொருத்தப்பட்டிருந்த குண்டே இவ்வாறு வெடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
இந்தக் குண்டுவெடிப்பினால் 8 மாணவர்கள் உட்பட 13 காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் அறிவித்துள்ளார்.

 
இந்த குண்டுவெடிப்பினால் 8 மாணவர்கள் உட்பட 13 காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் தற்போது குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் மேலும் குறிப்பிட்டார்.
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பஸ்வண்டியின் சாரதியின் நிலை கவலைக்கீடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
யுத்தம் நிறைவடைந்து பயங்கரவாத் ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மார்தட்டி வரும் இந்த வேளையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவமானது மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையிலும், இலங்கையில் கொழும்பில் மாத்திரமின்றி புறநகர் பகுதிகளிலும் பாதுகாப்புக்களும் தேடுதல் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் சூத்திரதாரி யார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக ஏற்பட்டுள்ளது.
 
இந்த தாக்குதல் சம்பவத்தினால் சிதறுன்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஒன்றினைந்து விட்டார்களா? என்ற அச்சமும், விடுதலைப் போராட்டத்தினை அவர்கள் மீண்டும் தொடங்கிவிட்டார்களா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்த கருத்திலிருந்த அறிய கூடியதாக இருக்கின்றது.

எனினும் மறுபுறம் சர்வதேச ரீதியாக அரசாங்கம் எதிர்கொள்ளும் அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவும் தமக்கு எதிரான அழுத்தங்கள் பிரச்சாரங்களை திசைமாற்றுவதற்காகவும் அரசாங்க தரப்பினரே திட்டமிட்டு இருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக இருப்பதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.