ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ள கருத்தினை நிராகரிப்பதுடன் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை அறிவித்துள்ளது

rambukwelaபெண்களுக்கெதிரான பாலியல் பலாத்காரச் செயல்களை இலங்கைப்படையினர் போர் ஆயுதமாக பயண்படுத்தியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ள கருத்தினை முழுiயாக நிராகரிப்பதுடன் அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு குறித்து தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு தேசிய பாதுகாப்பிற்கான ஊடகமத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் மாநாட்டின் போது போர் ஆயுதமாக இலங்கைப்படையினர் பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டமை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலர் ஹிலரி கிளின்டன் தெரிவித்துள்ளமை குறித்து ககருத்து வெளியிட்ட போதே அமைசசர் ஹெகலிய றம்புக்வெல இந்த கருதினை தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் இந்த கருத்தானது இறைமையுள்ள இலங்கை நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த மூன்றரை வருட யுத்த காலத்தில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை இலங்கை படையினர் எதிர்கொண்டதில்லை எனவும் இது முற்றிலும் திரிபுபடுத்தப்பட்ட ஒரு பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் கூறினார்.

ஆமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனினால் எதுவித சான்றுகளோ, பின்னனியோ இல்லாத நிலையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டினை  இறைமையுள்ள நாடு என்ற வகையில் தாம் முற்றாக நிராகரிப்பதுடன்  அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.