ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை ஒரு போதும் அடிப்பணிந்த நிற்காது

g_l_peirisஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுபிகின்ற ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசு ஒரு போதும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கைட்டி அடிப்பணிந்த நிற்காது என ஏற்றுமதி வர்த்தக அமைச்சர் என அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று  இடம்பெற்றது. இந்த ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜி எல் பீரிஸ் ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் பல பிழையான கருத்துக்கள் இந்த நாட்டில் நிலவி வருவதாக குறிப்பிட்டார்.
 
ஊதாரணமாக இந்த நாட்டில் தற்போதுள்ள எதிர்கட்சிகள் இந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகையை தமது அரசியல் இலாபத்திற்காக பல்வேறு வழிகளில் கையள்வதுடன், இதனை அரசியல் இலாபம் கருதி அரசியல் வியாபாரமாக மாற்றியுள்ளதகாவும் கூறினார்.
 
உண்மையில் ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் ஆராய்ந்துகொண்டிருப்பதாவும் இது தொடர்பில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்நிலையில் அரசாங்கமும் நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்துள்ளதுடன், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆவணங்களையும்; தகவல்களையும் வழங்குவர் எனினும் எதுவித விசாரணைகளுக்காகவும் இலங்கை அரசாங்கம் அவர்கள் முன் கைட்டி அடிப்பணிந்து நிற்காது எனவும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.
 
இறைமையுள்ள நாடு ஒருபோதும் இதற்கு அனுமதிக்க மாட்டாது எனவும் தாம் தமது சுயகௌரவத்தை ஒருபோதும் இழக்க தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
எனினும் இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் இந்த ஜிஎஸ்பி பிளஸ் சலுகை நீடிப்பு தொடர்பில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் செயற்பட்டு இந்த வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ள எடுக்கப்படவேண்டி அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசை புதிய கண்ணோட்டத்தில் பார்;க்கவேண்டுமெனவும், பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்நிலையில், பொருளாதார அபிவிருத்திக்காகவும், நாட்டின் வளாச்சிக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகையை நீடித்து உதவ வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
 
இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வாரிச்சலுகையினால் 7200 பொருட்கள் வரிச்சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், இதில் ஆடைத்துறையும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
 
தேசிய வருமானத்தில் பிரதான இடம்வகிக்கின்ற இந்த ஆடைத்துறை, ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகை கிடைக்காவிடின் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் வாய்ப்புள்ளதாலும், இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் நிலையிருப்பதனாலும் ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வாரிச்சலுகையை நீடித்து வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கைக்கு தமது உதவியை வழங்கவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.