டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்கப் பட்டுள்ளது

nerudal-eng1புதுடில்லியில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் மீது இன்று பிற்பகல் 3 மணியளவில் மர்மக் கும்பல் ஒன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கும்பலில் சுமார்  30  பேர் இருந்ததாகவும், தூதரகக் கட்டடம் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியமை காரணமாக, உயர்ஸ்தானிகரகத்தின் கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை.

தற்போது அந்தப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்தச் சம்பவத்தையடுத்து, கூடுதல் பாதுகாப்பு தேவையென்று தூதரக அதிகாரிகள் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.