பிரபாகரனை அழித்தொழித்தவர் தேசத்துரோகியா? அவருடன் ஒப்பந்தம் செய்தவர் தேசப்பற்றாளரா?

ponakari1தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்து அவ்வமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றொழித்த படையினருக்கு தலைமை வகித்தவர் தேசதுரோகியா? அல்லது பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு நாட்டை துண்டாடுவதற்கு முயற்சித்தவர் தேசபற்றாளரா? என்று ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கேள்வி எழுப்பினார்.

புலிகளின் தற்கொலை குண்டுதாரிகள் கைது செய்யப்படுகின்ற நிலையில் யுத்தத்தில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை எதிர்க்கட்சிகள் கோரியிருப்பது எவ்வகையிலும் நியாயமானது அல்ல என்பதுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் மங்கள சமரவீர எம்.பியும் சர்வாதிகாரத்தின் பக்கவாத்தியமாகவுள்ளனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ;

கடந்த மாதம் 6.6 வீதமாக இருந்த பணவீக்கத்தின் வேகம் 0.7 வீதத்தினால் குறைந்துள்ளது இதனால் பொருட்களின் விலை அதிகரிப்பும் குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பல்வேறு தகவல்களை பெற்று அரசாங்கத்திடம் பொருளாதார நிர்வாகம் இல்லை என்பதனை காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றது.

அரசாங்கம் அபிவிருத்தியில் புதிய பாதைக்கு செல்கின்றது அதனை தெரிந்துக்கொள்ளவத ரணில், தமது ஆட்சியில் மகாவலி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கூட இந்த அரசாங்கம் அபிவிருத்திக்கு ஒதுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றார். மகாவலி திட்டத்திற்கு அன்று 5 ஆயிரம் கோடி ரூபாவே ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களை அபிவிருத்தி செய்து ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு ஒதுக்கப்பட்ட தொகையானது மகாவலி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையினை விட அதிகமாகும்.

கிழக்கின் உதயம்,வடக்கின் வசந்தம், வீதி மற்றும் கிராமிய அபிவிருத்திகளை கேம்பிரிஜ் டெரஸில் இருந்து கொண்டு பார்க்காமல் உலக சர்வதேச மையத்திலிருக்கின்ற எனது அமைச்சிலிருந்து பார்த்தால் தெரியும்.

தேசதுரோகி, தேசபற்றாளர் என்ற சொற்பதங்களே இன்றைய அரசியல் களத்தில் புதிய பிரச்சினையாக இருக்கின்றன. சிங்கள அர்த்தத்தை பொறுத்தமட்டில் நாட்டின் மீது அன்பு செலுத்துபவர் தேசபற்றாளர்களாகவும் காட்டி கொடுத்தவர் தேசதுரோகியாவுமே இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டவர் தேசதுரோகி, அவரை கொன்றொழித்து பயங்கரவாதத்தை அழித்து இராணுவ வீரர்களையும் மக்களையும் பாதுகாத்தவரே தேசபற்றாளராவார்.

மிலேனியம் சிட்டியை காட்டிக்கொடுத்து அதன் முக்கியஸ்தரை வெளிநாட்டிற்கு அனுப்பி தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவித்து புலிகளுக்கு ஊடகத்துறை அமைச்சின் ஊடாக ஒலிப்பரப்பு செய்வதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் தேசதுரோகி, பஸ்களில் குண்டுகள் வெடிக்காமல் மக்கள் சுதந்திரமான நடமாட்டத்திற்கு ஏற்றவகையில் புலிப்பயங்கரவாதத்தை தோற்கடித்தவர் தேசபற்றாளராவார்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நினைத்ததை போல தேச துரோகிக்கும் தேசபற்றாளருக்கும் அர்த்தம் கற்பிக்கமுடியாது. அவ்வாறு கற்பிப்பதற்கு இடமளிக்கவும் முடியாது. குரேசியாவில் இன்னமும் கண்ணிவெடிகள் அகற்றப்படுகின்றன. விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

புலிகளால் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் யானையொன்று அண்மையில் பலியாகியுள்ளது.

பெண் தற்கொலை குண்டுதாரி சயனைட் உட்கொண்டு பலியானதுடன் மற்றுமொரு தற்கொலை குண்டுதாரி வழங்கிய தகவல்களின் பிரகாரம் பெரும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன இவ்வாறான நிலையில் தேசிய பாதுகாப்பை இரண்டாம்பட்சத்தில் வைத்து பார்க்க முடியாது வைக்கவும் இயலாது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது சர்வாதிகார ஆட்சியாளர்களான ஹிட்லர் முசோலினிக்கு எதிராக போர்த்தொடுத்த ஜனநாயகவாதிகள் ஒரே நாளில் இலட்சக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டனர் எனினும் இங்கு யுத்ததில் பலியான பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை எதிர்க்கட்சியினர் கோருகின்றனர்.

முகாம்கள் மாறினாலும் புலியில் புள்ளி மாறவில்லை என்பதற்கு அமைவாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் மற்றும் மங்கள சமரவீர எம்.பி ஆகிய இருவரும் சர்வாதிகாரத்திற்கு பக்கவாத்தியங்களாகவும் செயற்படுகின்றனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.