அரசாங்கத்தின் புதிய கண்டுபிடிப்பு: புலிகளின் மொத்த வாக்கிக் கணக்கின் தொகை 600

ltte_emblemவிடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று தன்னைப் பிரகடனப்படுத்திய நிலையில் தற்போது தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்று கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு செய்தியாளர் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கே.பி.யை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.பி.யிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவருக்கு சுமார் 600 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததன் பின்னர் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.