முகாமில் உள்ள தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

cpi-300x214இலங்கை அரசு வவுனியா முகாம்களில் சிறை வைத்துள்ள தமிழர்களை உடனடியாக விடுவித்து சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் இலங்கை அரசு கூறும் விளக்கங்களை ஏற்க முடியாது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் வவுனியா முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐ.நா.சபை சுட்டிக் காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இந்த விஷயத்தில் கூறும் விளக்கங்களை ஏற்க முடியாது என்றும், மத்திய அரசு தமிழர் பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.