ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகைக்காக மண்டியிட நாம் விரும்பவில்லை

makindaஐரோப்பாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக வழங்கப்படும் வரிச் சலுகையான ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகையை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தற்போது கோஷமிட்டு வருகின்றன. நிபந்தனைகளுக்கு அடிப்பணிய நாம் விரும்பவில்லை.

மண்டியிட நாம் விரும்பவில்லை. நிபந்தனைகள் இன்றி வழங்க முடியாவிட்டால், அந்த வரிச் சலுகை தேவையில்லை என தமது அரசாங்கம் கூறியுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  அலரி மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற காணி ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணிகள், காணி உறுதிகள் பற்றிப் பேசும் போது, மறக்க முடியாத காணி உறுதியொன்று இருக்கிறது. அதுதான் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டு கொடுத்த காணி உறுதி. சிங்கப்பூரை விட 20 மடங்கு பரப்பளவைக் கொண்டதும், இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடற்பரப்பு, கிழக்கு கடற்பரப்பு என்பன கோடு ஒன்றினை வரைந்து தெளிவான முறையில் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
 
அங்கு இலங்கையின் காவற்துறையினருக்கும் படையினருக்கும் செல்ல முடியாதிருந்தது. தற்போது கிராமங்களுக்கு துரிதமான அபிவிருத்தி சென்றடைந்துள்ளது. அன்று மண் போட்டு நிரப்பட்ட கிராமங்களின் வீதிகள் தற்போது கொங்கிரீட்டினால் அமைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் மாவட்டங்கள் தற்போது உலகத்திற்கு மிகவும் நெருக்கமான மாவட்டங்களாக மாறியுள்ளன எனவும் மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறிள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.