ஈழத்தமிழர்கள் முள் வேலிக்குள் தவிக்கும்போது கலைஞருக்கு விருது தேவையா?

drajaஇலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் தென் மாவட்ட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக்கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா? என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்தர்,

முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கேரள அரசு மதிக்காமல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அது இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த பிரச்சனை முடிவதற்குள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் முல்லைப்பெரியாறு பகுதியில் புதி அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக உறுதிபடுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் தமிழக அரசுக்கு எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இப்படி மத்திய அமைச்சரவையில் பொறுப்புள்ள ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருப்பது உண்மையா? இல்லையா? என்பதை முதல்வர் கருணாநிதி தெளிவுபடுத்துவாரா?

மத்தியில் காங்கிரஸ் கட்சி திமுகவிற்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு, தமிழர்களுக்கு எதிராக பல அநீதிகளை இழைத்து வருகிறது. திமுகவும் அதை வாய்மூடி பார்த்துக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் முள் வேலிக்குள் அகதிகளாய் முடங்கிக் கிடக்கிறார்கள். முல்லை பெரியாறு பிரச்சனையில் தென் மாவட்ட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு காஞ்சியில் தனக்குத் தானே விருதை கொடுத்துக்கொண்டு மாநில சுயாட்சி என முழங்கும் முதல்வர் கருணாநிதியின் இந்த செயல்தான் அண்ணாவின் கொள்கையா?.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.