எங்கள் விசாரணை முடியும் வரை கே.பியை வேறு எவரிடமும் ஒப்படைக்க மாட்டோம்

kpஉள்நாட்டு விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தியாகும் வரையில் குமரன் பத்மநாதனிடம் ஏனைய நாடுகள் விசாரணை நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசப் விவகாரப் பொறுப்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதனிடம் பல்வேறு முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாக இந்தியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆயுத கடத்தல்கள், சர்வதேச வலையமைப்பு, நிதிக் கட்டமைப்பு, கடல் மார்க்கமான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குமரன் பத்மநாதனிடம் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் வேறும் நாடுகளினால் விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்படுகிறது.
 
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்திய விசேட புலனாய்வுப் பிரிவினர் வருகை தரவுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
எனினும், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கும் வரையில் எந்தவொரு சர்வதேச அமைப்பினாலும் குமரன் பத்மநாதனிடம் விசாரணைகளை நடத்த முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.