இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாம் – இது எப்பிடி இருக்கு

slcஇலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மிகப் பிரபலமான உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் பல பெருந்தொகையான பணத்தை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளதாக புலனாய்வுத்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு புலிகளுக்கு நிதியுதவி வழங்கிய முக்கிய சந்தேக நபர்களில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் முக்கிய இடம் வகிப்பதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்த வடக்கு கிழக்கு அபிவிருத்தி அமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் பெருந்தொகைப் பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த விடயம் தொடர்பில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுதாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நாலக கொடஹெவவிற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தகவல்களை வழங்கியுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.