கடும் காற்றினால் வடபகுதி இடைத்தங்கல் முகாம்கள் 2000 சேதம்

nerudal-tamil-news1கடும் காற்றினால் வடபகுதியில் உள்ள சுமார் இரண்டாயிரம் தற்காலிக குடில்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அசராங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத் தரப்பினர் இதுவரையில் எந்தவிதமான கருத்தினையும் வெளியிடவில்லை.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் 255,500 மக்கள் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிகத் தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.