சதாசிவம் கனகரத்தினம் தொடர்பாக இலங்கை இனவாதிகளின் புதிய புரளி

kanakratnam_TNA-MP_150கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் தொடர்புபட்டிருப்பதாக சிறீலங்கா அரசு குற்றம் சுமத்தியுள்ளது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருக்கும் பெயர்குறிப்பிடாத சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் புதல்வரான கிரி என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்றும், லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை உட்பட கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்புக்கள், தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புபட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொழும்பு மாடிவெல பகுதியில் அமைந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களின் வாசத்தலத்தை இவ்வாறான தாக்குதல்களுக்கான தளமாக அவரது புதல்வர் பயன்படுத்தியதாகவும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் மூத்த அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இறுதிவரை வன்னி மக்களுடன் நின்று அவர்களுக்காக குரலெழுப்பியமைக்காக கடந்த நான்கரை மாதங்களாக திட்டமிட்டவகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அவர்களை சிறீலங்கா அரசு தடுப்புக் காவலில் வைத்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.