படைவீரர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

Switzerland UN Sri Lankaபடைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பாதுகாப்புப் படையினரின் ஒழுக்கம் தொடர்பில் பெருமைபட்டுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், குற்றச் செயல்களில் படைவீரர்கள் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க ஓருபோதும் அரசாங்கம் தயங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சனல் 4 ஊடகம் இலங்கையில் சிங்களவர் – தமிழர்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையில் போலியான காட்சிகளை வெளியிட்டுள்ளதாகவும், உடனடியாக இந்த சம்பவம் தொடர்பில் அந்த ஊடகம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் குற்றச் செயல் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில்  அமெரிக்கா அளித்த விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
27 ஆண்டு கால யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.