தொடரும் தமிழின அழிப்பு: பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் வன்னியில் செவ்வாய்க்கிழமை 21 தமிழர்கள் படுகொலை; 53 பேர் காயம்

vanni_20090224003வன்னியில் சிறிலங்கா படையினர்  நடத்திய பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 53 காயமடைந்துள்ளனர்.மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது  செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை என்பன சேதமாகின. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பெரும் அவலப்பட்டனர்.
vanni_20090224001

கிருசாந்தன் (வயது 17)

இயலவன் (வயது 11)

ப.கமலேஸ்வரி (வயது 40)

ப.தேசிகன் (வயது 07)

த.ஸ்ரீ (வயது 43)

க.லவன் (வயது 13)

ஜெ.பார்த்தீபன் (வயது 20)

ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

த.யசித்தா (வயது 08)

செ. புவனேந்திரன் (வயது 27)

தி. எறப்பதாஸ் (வயது 45)

த. தேசியன்

சி.விஜலட்சுமி (வயது 42)

ந.சிறிதரன் (வயது 40)

சி நிருசன் (வயது 15)

நா.தவமணிதேவி (வயது 49)

த.குயிலன் (வயது 02)

இ.துளசிகன் (வயது 05)

கி. அருளானந்தம் (வயது 33)

ச.திலக் (வயது 30)

ந.சுதாகரன் (வயது 31)

சி.சர்வலட்சுமி (வயது 31)

பூ.தேவி (வயது 35)

ர.கலைச்செல்வி (வயது 19)

ர.உசானந்தன் (வயது 24)

ச.யோகேஸ்வரி (வயது 54)

கு.சர்வானநந்தினி (வயது 21)

ஜெ.சூரியமாலா (வயது 25)

ப.பவித்திரா (வயது 04)

கு.சுரேந்திரன் (வயது 27)

பெ.அமலாம்பிகை (வயது 21)

ப.றெசானி (வயது 13)

செ. பரமேஸ்வரன் (வயது 34)

செ.தர்மசீலன் (வயது 30)

ந.உதயராஜ் (வயது 29)

இ.அருந்தவம் (வயது 23)

த.பன்னீர்செல்வம் (வயது 36)
 
நா.அருள்ராஜ் (வயது 47)
 
செ.யம்பக் (வயது 16)

நா.பகீரதன் (வயது 18)

ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
vanni_20090224004vanni_20090224006

vanni_20090224002

புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று பிற்பகல் 4:50 நிமிடமளவில் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ரவீந்திரன் வினித் (வயது 04)

ரவீந்திரன் வினோஜன் (வயது 14)

ரவீந்திரன் மதீனா (வயது 33)

டேவிட் ரவீந்திரன் (வயது 38)

தவராசா அஜந்தன் (வயது 22)

ஆகியோர் உடலங்கள் சிதறி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.