வன்னி மக்களை தனிமைப்படுத்துவதற்கு சிறப்பு அடையாள அட்டைகள்!

Sri Lankan Civil Warஏனைய தமிழீழ தாயக மக்களிடம் இருந்து வன்னி மக்களை வேறுபடுத்தும் நோக்கத்துடன், வதைமுகாம்களில் உள்ள மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்களுக்கு ஏற்கனவே இவ்வாறான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏனையோருக்கும் இவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

வழமையாக 16 அகவைக்கு மேற்பட்டோருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் நிலையில், வதைமுகாம்களில் உள்ள வன்னி மக்களில் 12 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு அடையாள அட்டைகளை வழங்குவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளமை மனித உரிமை ஆர்வலர்களிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.