இந்திய ‐ இலங்கை கடற்படையினர் இணைந்து இன்று கடற்போர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர்

navy-india1இலங்கை ‐ இந்திய கடற்படையினர் இணைந்து இன்று கடற்போர் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். இந்த பயிற்சிகள் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்று வருகிறது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொள்ளும் முதலாவது கடற்போர் பயிற்சி இதுவாகும்.

நட்புறவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைச் சென்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ்.ஷால் மற்றும் இலங்கை கடற்படையின் வருண ஆகிய போர் கப்பல்கள் இந்த பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனை தவிர அதிவேக தாக்குதல்கள் படகுகளும் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்திய போர் கப்பலில் உள்ள உலங்குவானூர்தியும் பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படையின் ஊடகத் தொடர்பு அதிகாரி கப்டன் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையில் பயற்சி பெறும் சிப்பாய்கள் மத்திய தரத்தில் உள்ள அதிகாரிகள் உட்பட 100 பேர் இந்த பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சேனாரத்ன கூறியுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.