எம் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால்; நாம் அமெரிக்க மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் – அமெரிக்காவை மிரட்டும் இலங்கை

jhuஇலங்கை மீது அமெரிக்கா தெரிவித்த மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்ககை;கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்கா மீது உடனடியாக மனித உரிமை மீறல் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியும் இன்று பொதுமக்களிடன் கையெழுத்து பெறும் கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கையெழுத்து வேட்டை பண்டாராநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கருகில் இடம்பெற்றது.
ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரெலிய ரத்தனதேரர்,  மற்றும் மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இராணுவ கண்காட்சியை பார்வையிட சென்றவர்கள் இந்த கையெழுத்து வேட்டையிலும் கைச்சத்திடும் வகையில் ஜாதிக ஹெல உறுமய அதற்கான  ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

இந்த கையெழுத்து வேட்டையின் போது பலர் இதில் தமது கையெழுத்துக்களை இட்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில இலங்கை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காகவும், இலங்கை மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலுமே மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்ற பதத்தினை கையிலெடுத்துள்ளதாகவும், ஆனால் உலக வரலாற்றில் அதிகளவில் மனித உரிமைகளை மீறியது அமெரிக்காவே என குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த மீறல்களை எந்த நாடும் எந்த அமைப்பும் தட்டிக்கேட்காத படியினால் அமெரிக்க இன்று மனித உரிமை மீறல்களை மறைத்து தனது குற்றங்களை பொக்கட்டில் போட்டுக் கொண்டு சிறிய நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டு அந்த நாட்டின் அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

அமெரிக்க வரலாற்றை எடுத்துப்பார்த்தால் அவர்கள் இலட்சக்கணக்கில் செவ்விந்தியர்களை கொலை செய்தே வளர்ந்து வந்தார்கள் எனவும், அதனைத் தொடர்ந்து கறுப்பு ஆப்பிரிக்க இனத்தினரை தடை செய்ததுடன், அங்கு பாரிய மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனாதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் உலக போரின் போது ஜேர்மன் டிறஸ்டேன் நகரின் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தி 1 இலட்சத்து 30 ஆயிரம் பேரைக் கொண்றதுடன், ஜப்பானில் நடத்தப்பட்ட அணுகுண்டுத் தாக்குதல்களினால் 2 இலட்சத்து 40 ஆயிரம் பேரைக் கொண்றதாகவும், அப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இரசாயண குண்டுகளை பயண்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய அவர், உலகத்தில் பாரிய அளவில் மனித உரிமைகளை மீறுவது அமெரிக்காவே எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமெரிக்காவிற்கு யாரும் சவால் விடுக்கவில்லை என தெரிவித்த அவர், இவ்வாறான மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அமெரிக்காவிற்கு எதிராக விசாரனை ஆணைக்குழுவொன்றை நியமித்து அவர்கள் மீது விசாரணை நடத்தும் படியும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலுமே தாம் இந்த கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

தாம் இவ்வாறு 10 இலட்சம் கையெழுத்துக்களை பெற்றுக்கொள்ளவிருக்கின்றோம். இதற்கு ஐக்கிய நாடுகளின் தலைமை செவிமடுக்காவிட்டால் தமது நாட்டினை போன்று உலகத்திலுள்ள நூற்றுக்கணக்கான நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடினை மேற்கொண்டு குறித்த நாடுகளின் அரசாங்கங்கள், பொது நிறுவனங்களை ஒன்றினைத்து அமெரிக்காவிற்கு எதிராக விசாரனைகளை மேற்கொள்ளும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தும் கொடுக்கவுள்ளதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.