நாடு கடக்கும் இலங்கையின் துர் நாற்றம்: தாய்லாந்துப் பெண் மீது இலங்கை இனவாதிகள் பாலியல் பலாத்காரம்

rapeகேகாலை மாவட்டம் வரகாபொல பகுதியில் உள்ள சர்வதேச ஆடை தயாரிப்பு நிலையத்தில் வேலைபார்க்கும் தாய்லாந்து பெண்ணை இலங்கை இராணுவத்தினர் கற்பழித்துள்ளதாக அவர் துல்கிரிய போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றதாக அறியப்படுகிறது.

இந்தக் குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் அனுராதபுரம் முகாமில் இருப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

போர் முடிவிற்கு வந்த பின்னர் இராணுவத்தினர் பலவகையான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்தவாரம் குருநாகலில் பாடசாலைப் பிள்ளைகள் செல்லும் வாகனத்தில், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் குண்டைப் பொருத்தியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சுமார் 25,000 தப்பியோடிய படையினருக்கும் அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளதால், அவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடுவதாகவும், குற்றச்செயல்கள் அதிகரிக்க அவர்களே காரணம் எனவும் அதிர்வின் நிருபர் தெரிவித்தார்.

இலங்கையில் பெண்கள் மீது பாலியல் பிரயோகங்கள் போரின்போது நடத்தப்பட்டது என்று கூறியிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அவர்கள், இலங்கையின் கடும் அழுத்தம் காரணமாக தனது கூற்றை சற்று மாற்றி தெரிவித்துள்ளவேளை, அவர் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.