மக்களை மீள் குடியேற்றும் நடவடிக்கை உலகத்திற்கு பூச்சாண்டி காட்டும் நடவடிக்கை போல் உள்ளது – பிரித்தானிய

britain-100_11இலங்கையில் அகதிகளை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமையப்பெறவில்லை என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
அகதிகளை மீள் குடியேற்றுவதற்காக பிரித்தானியா வழங்கிய உதவிகள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு அபிவிருத்தி அமைச்சர் மைக் போஸ்டர் தெரிவித்துள்ளார்.

ஓர் முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு இடம் நகர்த்து செயற்பாடே நடைபெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் செய்ததன் பின்னர் அமைச்சர் போஸ்டர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
எதிர்காலத்தில் பெய்யவுள்ள கடுமையான மழைக் காலத்தில் அகதி முகாம் மக்கள் எதிர்நோக்க நேரிடக் கூடிய அபாயங்கள் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
நிலக்கண்ணி வெடிகளை அற்றுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக பிரித்தானிய நிதி உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும்இ மீள் குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து திருப்தியடைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
மக்களை மீளவும் தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியேற்ற காட்டப்படும் சிரத்தை ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அகதிகளின் சுதந்திர நடமாட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
 
இறுதி விஜயத்தை விடவும் அகதி முகாம்களின் நிலைமைகள் அபிவிருத்தி அடைந்துள்ள போதிலும்இ எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழைக் காலத்தில் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
ஓர் முகாமிலிருந்து மற்றுமொரு முகாமிற்கு மக்களை இடம்நகர்த்தும் செயற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த வருட இறுதிக்குள் பெருந்தொகையான அகதிகளை மீள் குடியேற்ற முடியும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி வரவேற்கத் தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 4.8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும்இ மக்களுக்கு இந்த நிதி பயன்படக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அகதிகள் தங்களது உறவினர்களுடன் தங்குவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.