பிரித்தானியாவில் ஜந்தாவது வாரமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டம்.

P5260442சிறீலங்க அரசாங்கத்தினால் வதைமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்கள் கடுமையான சுழல் காற்றால் மிகவும் அல்லல் படும் நிலையில் அந்த மக்கள் நிம்மதியாக அவர்கள் சொந்த இடங்களில் குடியேற பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்து இன்று 5 ஆவது வெள்ளிக்கிழமையாக பிரித்தானிய பிரதமரின் காரியாலய முன்றலில் தொடர் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்களும் அந்த மக்களுக்காக குரல் கொடுத்தார்.
பல உள்நாட்டு பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தை பதிவு செய்தனர். பிரித்தானிய பிரதமருக்கான மனுவில் பல வேற்றின மக்கள் கையொப்பம் இட்டு செல்வதை காணக்கூடியதாக இருந்தது. வதைமுகாம்களை திற என்ற சாவி பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களும் அந்த வழியால் சென்ற மக்களுக்கு வழங்கப்பட்டது.

பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 7 மணி வரை நடக்கவிருக்கும் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளும் படி வேண்டுகின்றனர் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் பிரித்தானியா தமிழர் ஒன்றியத்தினர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.