டென்மார்க் “திசைகள்” இளையோர் அமைப்பினரால் இளையோர்களுக்காக ஓவியப் போட்டி

IMG_9318கடந்த சனிக்கிழமை 3ம் திகதி திசைகள் இளையோர் அமைப்பினரால், எமது தமிழ் சிறுவர், இளையோர்களுக்காக ஓவியப் போட்டி ஒன்று நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டது. இப்போட்டியில் 100 வரையிலான இளையோர் Vejle, Fredericia, Århus, Skjern, Grindsted, Vejen, Viborg, Herning & Holbæk ஆகிய நகரங்களில் இருந்து கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டியில் கலந்து கொண்ட இளையோர்கள், வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கேற்ப, எமது இளையோர்கள் தங்கள் ஓவியத் திறமையை மிகவும் சிறப்பாக, வியக்கும் வண்ணம் வெளிப்படுத்தி இருந்தனர்.

இப்போட்டியை நம் தேசம் பற்றிய எண்ணங்களை வெளிக் கொண்டு வரும் முகமாக வடிவமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எமது இளையோர்களின் ஓவியங்கள், ஓவியத் திறமைமிக்க கலைஞர்களினால் மதிப்பிடப் பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த ஓவியங்களை வரைந்த இளையோர் தெரிவு செய்யப்பட்டு, கௌரவிக்கப்படுவார்கள்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.