முடிந்தால் எங்கள் படையினரின் பாலியல் குற்றச் சாட்டை ஆதாரத்துடன் நிரூபியுங்கள்

mahinda-rajapaksha-2008-11-6-10-9-3இலங்கை இராணுவத்தினர் யுத்த காலத்தில் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டிருந்தால் சாட்சிகளுடன் அதனை நிரூபிக்குமாறு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார். உலக நாடுகளினால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அர்ப்பணிப்புடன் நாட்டை பாதுகாத்த படைவீரர்களுக்கு அவதூறு ஏற்படுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

படைவீரர்களும் பொலிஸாரும் ஒழுக்கத்துடன் கடமையாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முறைப்பாடுகளை தூதுவராலயம் ஊடாக எழுத்துமூலமாக முன்வைக்குமாறு உலக நாடுகளுக்கு ஜனாதிபதி சவால் விடுத்துள்ளார்.

உலகின் பலம்பொருந்திய நாடுகளினால் மேற்கொள்ள முடியாத சாதனையை இலங்கைப் படைவீரர்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.