பன்னிரு வேங்கைகளின் வீரவணக்கநாள் – லெப்.கேணல் குமரப்பாவின் துணைவியார் ஈகைச்சுடர் ஏற்றினார்

12_heros_oct5இந்திய சிங்கள கூட்டுச்சதியால் பலியாகிய குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரண்டு வேங்கைகளின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் மிகவும் உணர்வுபூர்வமாக இலண்டனில் நடைபெற்றுள்ளது. இலண்டன் மிச்சம் பகுதியிலுள்ள சிவன்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டிருந்தனர்.

uk_12heros051020090011

லெப்.கேணல் குமரப்பாவின் துணைவியார் திருமதி. ரஜனி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து லெப்.கேணல் குமரப்பாவின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய 11 மாவீரர்களினதும் சகோதரர்கள், மைத்துனர் என பல உறவினர் மலர்மாலைகளை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு அணிவித்தனர்.

அதன் பின் நிகழ்வுக்கு வருகைதந்திருந்த மக்கள் மலர்வணக்கம் செலுத்தினர். இந்நிகழ்வில் பன்னிரண்டு வேங்கைகளினதும் நினைவுகளைச் சுமந்து உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் மற்றும் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அவர்களதும் பிரத்தியேக உரை ஒலிவடிவில் மக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் உட்பட பலர் உரைநிகழ்த்தினர்.

12_heros_oct5

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.