வவுனியா பூந்தோட்டம் பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி

nerudal-tamil-news1வவுனியா பூந்தோட்டம் பிரதேசத்தில் சீ நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மூவரை கைதுசெய்ய மேற்கொண்ட முயற்சியின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான மூவர் பிரதேசத்தில் நடமாடிய போது, அவர்கள் குறித்து அறிய பிரதேச மக்கள் முயற்சித்த போது, அவர்களில் இருவர் கைத்துப்பாக்கி மற்றும் கைக்குண்டை காட்டி மக்களை அச்சுறுத்தியுள்ளனர் எனவும் பின்னர் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் காவற்துறையினர் இருந்த திசையை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் இதனையடுத்து தாம் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அத்துடன் தன்னிடம் இருந்து கைக்குண்டை மற்றைய சந்தேக நபர் வீசி எறிந்த போதிலும் அது வெடிக்கவில்லை எனவும் அந்த குண்டை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மூன்றாவது நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, அவரை தாம்; கைதுசெய்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் விடுதலைப்புலிகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது குறித்து கைதுசெய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை நடத்தி வருவதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.