பயங்கரவாத அச்சுறுத்தல் பூரணமாக முடிவுறுத்தப்படவில்லை – பசில் ராஜபக்ஷ

basil-rajapakshaபயங்கரவாத அச்சுறுத்தல்கள் பூரணமாக முடிவுறுத்தப்படவில்லை எனவும், தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகளை முற்றாக இல்லதொழிக்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உiராயற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் இராணுவ நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பயங்கரவாத கருத்துக்களினால் மூளைச் சலவை செய்யப்பட்ட நபர்கள் இன்னமும் எஞ்சியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
உளரீதியாக அவர்களுக்கு சரியான தீர்வுத் திட்டங்களை வழங்க வேண்டும் எனவும், அதற்கான சிறந்த தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்குவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியைப் பொறுப்பேற்கும் காலத்தில் எந்த இடத்தில் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் காணப்பட்டதாகவும், தற்போது இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திற்கும் அச்சமின்றி செல்லக் கூடிய நிலைமை உருவாகியுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பெருந்தொகையான சிறுவர்கள் மனதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இனவாத கருத்துக்களை விதைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதியின் தலைமையின் கீழ் குறுகிய காலத்தில் மக்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.