பருவப் பெயர்ச்சி மழைக் காலத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் தங்க வைக்கப்பட வேண்டும்

John Holmes, United Nationsபருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இடம்பெயர்ந்தோரை வேறு இடங்களில் பாதுகாப்பாக தங்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
 
வவுனியா மெனிக்பாம் முகாம்களில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோரை வேறும் இடங்களில் தங்க வைக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கடும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், முகாம் வாழ் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது காணப்படும் வடிகாலமைப்பு முறையின் காரணமாக  முகாம்களில் வெள்ள அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்பு மிகவும் அதிகமாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
 
இடம்பெயர் மக்களை வேறும் இடங்களில் தங்க வைக்கும் செயன்முறையின் போது மக்களின் சுதந்திர இடம்நகர்வினையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரப் பொறுப்பாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.