இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஐ.நா பிரகடனத்தை மீறியுள்ளது

jean_lamber eu_thumbஅகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பிரடகனத்தை மீறிச் செயற்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசிய வலயப் பிரதிநிதிக் குழுத் தலைவர் ஜேன் லம்பெர்ட் தெரிவித்துள்ளார்.

வடக்கு இடம்பெயர் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் சுதந்திரமாக இடம் நகரக் கூடிய உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இது ஐக்கிய நாடுகளின் பிரகடனத்திற்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான பிரகடனத்திற்கு புறம்பானது என அவர் தெரிவித்துள்ளார்.
 
1966ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டதகாவும், 1976ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருவதகாவும் குறிப்பிடப்படுகிறது.
 
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை குறித்து திருப்தியடைய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பில் லம்பெர்ட் அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்ட சம்வம் பெரும் அதிர்சச்சியதாக அவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.