ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகைக்காக தனது குறுக்கு மூளையை உபயோகிக்கும் மகிந்த

makindacartoonஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுத்தருமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைக்கும் வகையில் மதத் தலைவர்கள் அடங்கிய குழுவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள பிரெசல்ஸிற்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெல்லன்வில விமலரத்ன தேரர், கபுருகமுவே வஜிர தேரர் மற்றும் கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெல்கம் ரஞ்சித் ஆகியோர் அடங்கிய குழவையே பிரெசல்ஸூக்கு அனுப்பி வைக்க ஜனாதிபதி தீர்மானிமானித்துள்ளார்.
 
இவர்களின் ஐரோப்பிய விஜயம், எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி முதல் 8ம் திகதி வரை இடம்பெற உள்ளது. ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்த மத தலைவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்குமாறும், தங்கியிருப்பதற்கு நட்சத்திர விடுதிகளை பதிவு செய்யுமாறும் ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.
 
தேர்தல் பிரசார மேடைகளில் ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச் சலுகை தேவையில்லையெனக் கூறிவரும் மகிந்த ராஜபக்ஷ மறுபக்கத்தில் குறித்த வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக மதத்தலைவர்களைக் கூட தூதுவர்களாக அனுப்பி ஜனாதிபதி இரட்டைவேடம் போடுவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.