25 வீதமான அகதி முகாம் குழந்தைகள் கடுமையான குறைபோசாக்கினால் அவதி

unicef2அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 25 வீதமான சிறுவர் சிறுமியர் கடுமையான குறை போசாக்கினால் அவதியுறுவதாக யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
 
மேலும், 40 வீதமான சிறுவர் சிறுமியர் சாதாரண குறைபோசாக்கினாலும் அவதியுறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

41.9 வீதமான குழந்தைகள் வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17.2 குழந்தைகள் வளர்ச்சிக்கு ஏற்ற நிறையின்றி காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கடுமையான போசாக்கு குறைபாட்டினால் அவதியுற்ற குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதி பிலப்பி தம்முல்லே தெரிவித்துள்ளார்.
 
அகதி முகாம்களில் தங்கியுள்ள 14000 குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மேலதிகமான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.