அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை மக்களுக்கு எடுத்து சொல்வோம்

Rangebandaraஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்க அதிகாரிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
 
ஊழல்களில் ஈடுபடுவோர் குறித்து கண்டறியும் நோக்கில் விசேட குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
அரசாங்க அமைச்சர்களின் ஆதரவுடன் அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
அண்மையில் தீக்கிரையாக்கப்பட்ட தமது அலுவலகத்தை பார்வையிட தமக்கு காவல்துறையினர் அனுமதியளிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து போதிய தகவல்கள் காவல்துறையினருக்கு வழங்கிய போதிலும் எவ்வித நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.