நங்கள் என்ன பூச்சியா; புழுவா இவர்கள் காலில் விழுவதற்கு

Sri Lanka Tamils Expelledசர்வதேச மற்றும் உள்நாட்டு தொண்டு நிறுவனங்களின் கட்டளைகளுக்கு அடி பணிந்து ஆட்சி நடத்த முடியாது என பிரதரமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
 
உதவியாக பணத்தை வழங்கும் ஒரே காரணத்திற்காக சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் இறைமைக்கு குந்தகம் ஏற்படக் கூடிய எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
எந்த சூழ்நிலையிலும் அரசாங்கத்திற்கு எந்தவொரு சக்தியும் கட்டளைகளை பிறப்பிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
 
வனவிலங்கு அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.