’’இலங்கை தூதரகம் தமிழக்த்திற்கு தேவையில்லை. இலங்கை தூதரகத்தை இழுத்து மூடு. இலங்கை தூதரை கைது செய்’’ – சீமான்

seeman101நாம் தமிழர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடந்தது.  சீமான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று  கண்டனக்கோஷம் எழுப்பினார்.

 ’’இலங்கை தூதரகம் தமிழக்த்திற்கு தேவையில்லை.  இலங்கை தூதரகத்தை இழுத்து மூடு.   இலங்கை தூதரை கைது செய்’’என்று ஆவேசமாக முழக்கமிட்டார்.

அவர் மேலும், ‘’இலங்கை துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க் கொழுப்பெடுத்து பேசியுள்ளார்.

இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்த வில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை என்று திமிருடன் கூறியுள்ளார்.
 
இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும். கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திருநாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு உணவு,

உடை, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச்சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட யாரையும் அனுமதிக்க வில்லை.
 
இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிச அரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார். மேலும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக அவதூறாகப் பேசித்திரிகின்றார்.
 
 வாய்க் கொழுப்பில் திரியும் சிங்கள துணைத்தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நாட்டை விட்டு வெளியேறு’’என்று பேசினார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.