யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்ப பூரண ஆதரவளிக்கப்படும் – ரஸ்யா

russia_01யுத்தத்தின் பின்னரான இலங்கையை கட்டியெழுப்ப பூரண ஆதரவு அளிக்கப்படும் என ரஸ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைளுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்படும் என ரஸ்யா குறிப்பிட்டுள்ளது.

யுத்த ஆரம்ப காலம் முதல் யுத்தம் முடிவடைந்துள்ள சந்தர்ப்பம் வரையில் பல கட்டங்களில் ரஸ்யா உதவிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் விளாடிமிர் மிக்கலோவ் தெரிவித்துள்ளார்.
 
640,000 பெறுமதியான நிவாரணப் பொருட்களை கையளிக்கும் வகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்காக இரண்டு விசேட நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இவர்கள் வடபகுதியில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, ரஸ்யா வழங்கி வரும் ஆதரவுகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.