துணைத்தூதரை வெளியேற்றா விட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்

seemaan004சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கிற இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சீமான் ஈழத் தமிழர்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இலங்கை துணை தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அது மிருகக் காட்சி சாலை அல்ல என்று வாய்க்கொழுப்புடன் பதிலளித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தவறானவர்கள் எனவும் கூறுகிறார். தமிழ்நாட்டுக்கே வந்து தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இழிவுபடுத்தி பேசும் அவரை இங்கு பணியாற்ற அனுமதிக்கக்கூடாது.
 
ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை தாங்க முடியாமல் வேதனை அடைந்து வரும் இந்த நேரத்தில் பொறுப்பு வாய்ந்த பதவியில் உள்ள அதிகாரி ஒருவர் இப்படி பேசியிருப்பதால் வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம்.அவரை உடனடியாக மத்திய அரசும் தமிழக அரசும் வெளியேற்ற வேண்டும்.
 
தமிழ்நாட்டுக்கு இலங்கை துணை தூதரகமே தேவையில்லை. தமிழினத்துக்கான ஒரு தூதரகம்தான் இங்கே அமைய வேண்டும். வடிவேல் கிருஷ்ணமூர்த்தியை வெளியேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் தமிழின உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி மிக பெரிய போராட்டங்களை நடத்துவோம் என்றார் சீமான்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.