விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்த மருத்துவர்களுக்கு கடமைகளை ஆரம்பிக்க அனுமதி

Tamil_doctors_ap_2விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்பட்டனர் என குற்றம்சுமத்தப்பட்டிருந்த தமிழ் மருத்துவர்கள் தமது கடமைகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருத்துவர்கள் நான்கு பேரில் மூவர் வடக்கு கிழக்கில் சேவைகளை தொடர அங்கு சென்றுள்ளனர்.

ஏனைய மருத்துவர்கள் மேலதிக மருத்துவக் கல்விக்காக கொழும்பில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போரின் இறுதிக் கட்ட காலத்தில் மேற்கூறிய மருத்துவர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் அரசப் படையினர் பொதுமக்கள் தங்கியிருந்த பிரதேசங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றம்சுமத்தி செய்திகளை வெளியிட்டிருந்தன.
 
எனினும் போரின் இறுதியில் கைதுசெய்யப்பட்ட இந்த மருத்துவர்கள் தாம் விடுதலைப்புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே பொய்யான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து இந்த மருத்துவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
 
இதேவேளை ஒரு மருத்துவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.