திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களின் இலங்கை வியஜம் எதற்காக?

thimuமுட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டுள்ள மூன்று லட்சம் முகாம் மக்களை விடுவிக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழக எம்பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர். அத்தோடு இந்திய அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவையும் முகாம்களை பார்வயிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழகத்தில் இருந்து எழுந்தது.

இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர் பாலு தலைமையில் பத்து பேர் கொண்ட தமிழகத்தைச் சார்ந்த திமுக காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் நாளை சனிக்கிழமை இலங்கைக்கு பயணமாவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
திமுகவின் டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஏ.கே.எஸ் விஜயன், ஜெலன் டேவிட்சன், ஆகீயோர் திமுக எம்பிக்களாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனனும், சுதர்சன நாச்சியப்பன், என்.எஸ்.வி சித்தன், கே.எஸ். அழகிரி, ஜே.எம்.ஹாரூண் ஆகியோர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் என பத்து பேர் கொண்ட குழு ஐந்து நாள் பயணமாக இலங்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
 
இவர்கள் வவுனியா உள்ளிட்ட பல் வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிடுவார்கள் என்றும் பின்னர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்வை சந்தித்து கலந்து பேசுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக்குழுவில் மதிமுக, அதிமுக, உள்ளிட்ட வேறு எந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இல்லை என்பதோடு சுதந்திர ஊடக இயக்கங்கள் இப்பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை வில்லை என்றே தெரிகிறது.

இலங்கை செல்லும் தமிழ் நாட்டுப் பாராளமன்ற உறுப்பினர்களிடம் சில கேள்விகள்

  • இப்படி வன்னிமுகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க இலங்கை அரசு உங்களைப் பயன் படுத்துகிறதா?
  • இலங்கைக்கு முகாம்களைப் பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட முடியுமா?
  • உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த முகாமையாவது பார்வையிட முடியுமா?
  • முகாம்களில் உள்ளவர்களை உங்களால் தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய முடியுமா?
  • இறுதிப் போர் நடந்த பகுதிகளில் மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய முடியுமா?
  • நீங்கள் சென்று வந்தபின் நீங்கள் செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா?
  • இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?

இலங்கை சென்று அவர்கள் தரும் விருந்துகளை(?) சுவைத்து மகிழும் படி உங்களை வாழ்த்தி அனுப்புகிறேன்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.