கிழக்கில் ஆட்கடத்திப் பணம் பறிக்கும் வேலை மீண்டும் ஆரம்பம் ‐ கோவிந்தன் வீதியில் பணம் பறிக்கும் மையம்

karuna20and20pillayan_01கிழக்கில் மீண்டும் ஆட்களைக் கடத்தியும் அல்லது வீட்டைப் பூட்டி திறப்பை எடுத்தும், மிரட்டியும் பணம்பறிக்கும் வேலைகளை கருணா அணியினர் ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 6 பேர்வரை கடத்தப்பட்டு இவர்களில் ஒருவர் பணம் கொடுத்து மீண்ட நிலையில் ஏனைய ஐவர் எங்கு என்று தெரியாத நிலையில் உறவினர்கள் அல்லலுறுவதாக தெரியவருகிறது.

மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இயங்கும் அலுவலகத்தின் முக்கியஸ்த்தரான றஞ்சன் என்பவர் இந்த பணம் பறிக்கும் கருணா அணிக்குத் தலமை தாங்குவதாக அவ்வணியின் முக்கயஸ்த்தர் ஒருவர் ஊடாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

பணத்தை வசூலிக்கக்கூடியவர்களின் பட்டியல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இரவில் அந்த வீடுகளுக்குச் செல்லும் கருணா தரப்பினர் குறித்த பணம்படைத்தவர்கள் இல்லாவிடின் வீட்டில் உள்ளவர்களை வெளியில் அனுப்பிய பின் வீட்டைப் பூட்டித் திறப்பை தம்முடன் எடுத்துச் செல்வதாகவும் கோவிந்தன் வீதி அலுவலகத்தில் சமூகமளித்து திறப்பை மீழப் பெறலாம் எனத் தெரிவிப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பொதுத் தேரிதல் ஒன்று வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு பெருமளவு பணம் திரட்டவேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகவே கருணா தரப்பினர் முன்னேற்பாடாக பணவசூலில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானின் நடமாட்டத்தை திருகோணமலைக்குள் வரையறுக்க அரசாங்கதரப்பு முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தல் ஒன்று வருமிடத்து கிழக்கில் கருணாதரப்பினர் தங்கு தடையின்றி பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு வாக்கு வேட்டை நடத்துவதற்கான களத்தை திறந்துவிடவே அரசாங்கம் முயற்சி செய்வதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாகாணசபை வேலைகள் முடிவடைந்த பின் உடனடியாக மட்டக்களப்பிற்கு செல்லும் பிள்ளையானை திருமலையிலேயே தங்குமாறு அரசாங்கம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.