அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2009-ம் ஆண்டின் அமைதிக்கான் நோபல் பரிசை வென்றுள்ளார்

obamaஇந்த அறிவிப்பை வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஸ்வீடன் அகாடெமி, “சர்வதேச நாடுகளுக்கு இடையே அரசுமுறை உறவை வலுப்படுத்துவதிலும், உலக மக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதிலும் மேற்கொண்டு வரும் கடுமையான முயற்சிகளுக்காக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது,” என்று தெரிவித்தது.

‘அணு ஆயுதமற்ற உலகம் என்ற நிலையை எட்டுவதற்கான ஒபாமாவின் திட்டங்கள் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகள் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டது.

ஓர் அதிபராக சர்வதேச அரசியலில் புதியச் சூழலை உருவாக்கியவர், பராக் ஒபாமா. சர்வதேச நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை சுமுகமாக தீர்வு காண, அமைதிப் பேச்சுவார்த்தையை ஆயுதமாக கையாள்பவர். அணு ஆயுதமற்ற உலகை உருவாக்கும் வகையில், அணு ஆயுத தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கி வருபவர்.

உலக நாடுகளுக்கு இடையே உள்ள முக்கியப் பிரச்னைகளைக் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடாக அமெரிக்கா திகழ்வதற்கு, ஒபாமாவின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை.

உலக அளவில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தைப் பெற்றவரும், மக்களின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் முக்கியத்துவம் அளித்து வருபவருமான பராக் ஒபாமா, மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ராஜதந்திரத்துடன் இயங்கி வருபவர்,’ என்று ஒபாமாவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது ஸ்வீடன் அகாடெமி.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு உலக அளவில் 205 பேர் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இறுதியில் 5 பேர் கொண்ட அறிஞர்கள் குழு, ஒபாமாவை தேர்ந்தெடுத்துள்ளது.

ஸ்வீடன் அறிவியலாளரும், டைனமிட்டை கண்டுபிடித்தவருமான ஆல்ஃபர்ட் நோபலின் நினைவாக வழங்கப்படும் நோபல் பரிசுகள், அவரது நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதியன்று வழங்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில், பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் தங்க பதக்கத்துடன் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.