இலங்கைக்கு தி.மு.க. அணி எம்.பி.க்கள் குழு செல்வது ஏமாற்று வேலை: விஜயகாந்த்

vijayakanth1இலங்கைக்கு தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் குழு செல்வது ஏமாற்று வேலை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், “இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரை சந்திப்பதற்காக டெல்லி சென்றேன். பிரதமரை பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால். தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலுவுக்கு மட்டும் அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, காவிரி நீர் பிரச்னை, கச்சத்தீவு தாரை வார்ப்பு என தமிழகத்தின் நலன்கள் எல்லாம் கூறுபோடப்பட்டு விட்டன.

திமுக கூட்டணி எம்.பி.க்கள் பிரதமரைச் சந்திக்கச் சென்ற போது, அவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சரும் சேர்ந்து சென்று மனு கொடுத்திருக்கிறார். சிதம்பரத்துக்கு தெரியாதது எதுவுமில்லை. யாரை ஏமாற்ற இந்த வேலை? இலங்கைப் பிரச்னையில் எல்லோரும் சேர்ந்து கபட நாடகம் ஆடுகிறார்கள்,” என்றார் விஜயகாந்த்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.