தமிழீழத்தின் முக்கிய சொத்தில் ஒன்றான யாழ்ப்பாணம் கோட்டைக்கு வந்த நிலைமை

jaffnafortயாழ். நகரில் உள்ள புராதன கோட்டை பகுதியை இராஜதந்திரிகள் தங்குவதற்கான விடுதியாகப் புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென பௌத்தபிக்கு ஒருவர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிருந்து பணியாற்றவுள்ள இவர் யாழ். குடாநாட்டில் உள்ள தொல்பொருள் நிலையங்கள், புராதன இடங்கள் என்பவற்றை ஆராய்ச்சி செய்வதிலும், அவற்றைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் கோட்டே பிரதேச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாகப் பணியாற்றிய இவர், யாழ்ப்பாணத்திற்குச் சென்று அங்கு பணியாற்ற விரும்புவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்ததையடுத்து, இவர் யாழ். அரச செயலகத்தில் சமூக சேவைகள் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.