இடம்பெயர்ந்தோரின் சுதந்திர இடம்நகர்வினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்

robert_blakeதமிழ் இடம்பெயர்ந்தோரின் சுதந்திர இடம் நகர்வினை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென மத்திய, தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.

வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இடம்பெயர்ந்தோரை பதிவு செய்தல் உள்ளிட்ட சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் நீதி மற்றும் ஜனநாயக சமத்துவத்தை நிலைநாட்ட அரசாங்கம் பாடுபட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
உள்நாட்டு வெளிநாட்டு தமிழர்களை ஒன்றிணைந்து நடைமுறைச் சாத்தியப்பாடுடைய ஓர் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதன் மூலம் நிரந்தர சமாதானம் நோக்கி செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
புலம்பெயர் இலங்கையர்களுக்கும், ரொபர்ட் ஓ பிளக்கிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நீண்ட காலமாக நல்ல உறவு காணப்படுவதாகவும் இந்த ஆண்டில் மட்டும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மனிதாபிமான உதவியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.