புல்மோட்டை வதைமுகாமில் சிறீலங்கா படையினர் வெறியாட்டம்! 78 ஆண்கள் கடத்தல்!!!

Sri-Lankan-army-soldiers--001திருமலை வடக்குப் புல்மோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் வதைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 ஆண்கள் சிறீலங்கா படையினரால் கடத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (09.10.2009) இரவு பவள் கவச வாகனங்கள் சகிதம் புல்மோட்டை வதைமுகாமிற்குள் புகுந்த சிறீலங்கா படையினர், அங்கிருந்த 78 ஆண்களை கடுமையாகத் தாக்கி வாகனங்களில் குண்டுக்கட்டாகக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் மீண்டும் புல்மோட்டை வதைமுகாமிற்குள் நுழைந்த சிறீலங்கா படையினர், அங்கிருந்த இளம் பெண்களை பிடித்துச் செல்வதற்கு முற்பட்ட பொழுது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

சிறீலங்கா படையினரின் வெறியாட்டத்தால் புல்மோட்டை வதைமுகாமில் பெரும் பதற்றம் மேலோங்கியுள்ளது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.