விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்காவிட்டால் பாரிய அழிவுகளை எதிர்நோக்கியிருக்கும்

Jagath_Jayasuriyaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்காவிட்டால் நாடு பாரிய அழிவுகளை எதிர்நோக்கியிருக்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இராணுவப் படையின் அறுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இராணுவத்தினரும் ஏனைய படையினரும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்க தவறியிருந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பாரிய ஆயுதத் தொகுதியே இதற்கு சான்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தற்போது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் விசேட இராணுவக் கட்சியில் படையினரின் பலம் மட்டும் வெளிக்கொணரப்படவில்லை எனவும், நாட்டிற்கு ஏற்படக் கூடிய பேராபத்தையே இது பறை சாற்றுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை இலங்கை இராணுவம் கட்டமைக்கப்பட்டு  60 வருடங்கள் பூர்த்தியடைந்து உள்ளதையொட்டி இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளிலும் பல்வேறு வைய்பவங்கள் நடர்த்தப்பட்டு வருகின்றன இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் இராணுவத்தினரால் அமைக்கபட்ட நிரந்தர வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கபட்டுள்ளன
கடந்த கால யுத்த சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் வறிய நிலையிலுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Copyright © 2004 - 2017 நெருடல். All rights reserved.